லம்போர்கினி
வெனினோ கார் விற்று தீர்ந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது 50 ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் விதத்தில்
வெனினோ என்ற ஸ்பெஷல் எடிசன் சூப்பர் காரை ஜெனீவா மோட்டார் ஷோவில் லம்போர்கினி
வெளியிட்டது.
மொத்தம் 3 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும்
என்று லம்போர்கினி அறிவித்தது. இதனால், ஜெனீவா மோட்டார் ஷோ வந்த பார்வையாளர்கள் இந்த காரை பார்க்க
தவறவில்லை. இந்த நிலையில், ஆட்டோமொபைல் இணையதளம் ஒன்று லம்போர்கினி
வெனினோவை பற்றி எதிர்மறையான விமர்சனத்தை முன் வைத்தது.
இதுவரை வெளியான
கார்களில் மோசமான டிசைன் கொண்ட கார் என அறிக்கை வெளியிட்டது. இந்த விமர்சனங்களை
எல்லாம் தாண்டி தற்போது 3 ஸ்பெஷல் எடிசன் கார்களும்
விற்பனையாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட்டியாளர்கள்
லாஃபெராரி, மெக்லாரன் பி1 ஆகிய கார்கள் இதனுடன் சேர்ந்து அறிமுகம்
செய்யப்பட்டது. அவையும் லிமிடேட் எடிசனாக விற்பனை செய்யப்பட உள்ளது. இவை மூன்றுமே
லிமிடேட் எடிசன் கார்கள். ஃபெராரி நிறுவனம் மொத்தம் 499 லாஃபெராரி சூப்பர் கார்களையும், மெக்லாரன் நிறுவனம் 375 பி1 கார்களையும், லம்போர்கினி வெறும் 3 வெனினோ கார்களையும் விற்பனை செய்ய
முடிவு செய்துள்ளதாக அறிவித்தன.
எஞ்சின்
இந்த காரில் 6.5
லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.
பவர்
இந்த கார் 750 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
உந்து சக்தி
0-100 கிமீ வேகத்தை வெறும் 2.8
வினாடிகளில்
தொட்டுவிடும்.
டாப் ஸ்பீடு
மணிக்கு 355 கிமீ வேகத்தில் பறக்கும் அம்சங்களை
கொண்டது.
எடை
இந்த கார் 1,450
கிலோ எடை கொண்டது.
விலை
இந்த கார் 3.9
மில்லியன் டாலர்
விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
டெலிவிரி
இந்த ஆண்டு
இறுதிக்குள் இந்த கார் டெலிவிரி கொடுக்கப்படும் என லம்போ தெரிவித்துள்ளது. ஆனால்,
இன்னமும் சோதனைகள்
நடத்தப்பட்டு வருவதால் உற்பத்தி துவங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட்டியாளர்கள்
லாஃபெராரி, மெக்லாரன் பி1 ஆகிய கார்கள் இதனுடன் சேர்ந்து அறிமுகம் செய்யப்பட்டது. அவையும் லிமிடேட் எடிசனாக விற்பனை செய்யப்பட உள்ளது. இவை மூன்றுமே லிமிடேட் எடிசன் கார்கள். ஃபெராரி நிறுவனம் மொத்தம் 499 லாஃபெராரி சூப்பர் கார்களையும், மெக்லாரன் நிறுவனம் 375 பி1 கார்களையும், லம்போர்கினி வெறும் 3 வெனினோ கார்களையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்தன
No comments:
Post a Comment