பிஎம்டபிள்யூ ஐ8 எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்










எதிர்கால ஸ்போர்ட்ஸ் கார்களுக்கான முன்னுதாரணமான நவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் கார் பிராங்க்ஃபர்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
கார்பன் ஃபைபர் பாடி மற்றும் ஏராளமான பிரத்யேக பாகங்களுடன் லைட் வெயிட் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காராக வந்திருக்கும் இந்த காரின் சுவாரஸ்யமான தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.ஸ்போர்ட்ஸ் கார் சாதாரண கார்களுக்கு இணையான திறன் கொண்டதாக இருக்கிறது.

கார்பன் ஃபைபர் பாடி

இந்த காரில் கார்பன் ஃபைபர் மற்றும் இலகு எடை பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், இந்த காரின் எடை வெறும் 1,490 கிலோ மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார்

ஹைபிரிட் நுட்பம் கொண்ட இந்த காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் பவரை பின்புற வீல்களுக்கும், எலக்ட்ரிக் மோட்டார் முன்புற சக்கரங்களுக்கும் பவரை கடத்தும்.

பவர்

பெட்ரோல் எஞ்சின் 228 எச்பி ஆற்றலையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்கும். எலக்ட்ரிக் மோட்டார் 129 எச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும். அதிகபட்சமாக ஹைபிரிட் நுட்பத்தில் 357 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

மைலேஜ்

ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் கணக்கீட்டின்படி, ஒரு லிட்டருக்கு 40 கிமீ வரை மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு

பிஎம்டபிள்யூ 8 அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 0-100 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் கடந்து விடும்.

ரேஞ்ச்

பெட்ரோல் மற்றும் பேட்டரி சார்ஜ் மூலம் 500 கிமீ வரை இந்த ஸ்போர்ட்ஸ் கார் செல்லும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

விலை

1,35,925 டாலர் விலையில் இந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் விலை ஆரம்பமாகிறது.

ஹைபிரிட் மாடல்

இது பிளக் இன் ஹைபிரிட் கார். எலக்ட்ரிக் மோட்டார் தவிர, டர்போசார்ஜர் துணை கொண்ட 1499 சிசி கொண்ட 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 231 எச்பி ஆற்றலையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

விசேஷ டிரான்ஸ்மிஷன்

இந்த காரின் பெட்ரோல் எஞ்சின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைந்து பின்புற சக்கரங்களை இயக்கும். இதுதவிர, ஒருங்கிணைந்த 2 ஸ்டேஜ் டிரான்ஸ்மிஷன் மின் மோட்டார் மூலம் முன்புற சக்கரத்தை இயக்கும். தேவைக்கு ஏற்ப மின் மோட்டாரையும், பெட்ரோல் எஞ்சினையும் சேர்த்தோ அல்லது தனித்தனியாகவும் இயக்க முடியும்.

லித்தியம் அயான் பேட்டரி

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் லித்தியம் அயான் பேட்டரி மூலம் 35 கிமீ வரை செல்லலாம். சார்ஜ் செய்ய 3 மணி நேரம் பிடிக்கும்.


   
Unknown Web Developer

No comments:

Post a Comment

see this