ஏரியல் ஆட்டம் 3.5ஆர்






இங்கிலாந்தை சேர்ந்த ஏரியல் மோட்டார்ஸ் நிறுவனம் அதிசக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரிப்பதில் உலக அளவில் பிரபலமான நிறுவனம். தற்போது மூன்று கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
அதில் ஒன்றான ஏரியல் ஆட்டம் 3.5 என்ற கார் மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஏரியல் ஆட்டம் 3.5ஆர் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த காரில் சஸ்பென்ஷன், டிரான்ஸ்மிஷன் மற்றும் டிசைனில் மாற்றங்களை செய்து மேம்படுத்திய மாடலாக வந்துள்ளது.

விலை

இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் இந்த புதிய ஏரியல் ஆட்டம் 3.5ஆர் கார் 64,800 பவுண்ட் விலையில் வர இருக்கிறது. எனவே, ஸ்போர்ட்ஸ் கார் பிரியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சிறப்பம்சங்கள்


அதிகபட்ச மாறுதல்கள் செய்துகொள்ளும் வசதியை அளிக்கும் ஓலின்ஸ் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப டயர், பாடி மற்றும் பிரேக்குகளை மேம்படுத்திக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.

இலகு எடை

இந்த கார் வெறும் 550 கிலோ எடை கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. கார்பன் ஃபைபர், அலுமினியம் போன்வற்றிலான பாகங்களால் இந்த எடை குறைப்பு சாத்தியமாக்கப்பட்டுள்ளது. ஒரு டன் எடைக்கு 636 எச்பி பவர் என்ற விகிதாச்சாரத்தை கொண்டது.

பெர்ஃபார்மென்ஸ்

இந்த அதிகசக்திவாய்ந்த கார் 0- 97 கிமீ வேகத்தை வெரும் 2.6 வினாடிகளில் கடந்து விடும் வல்லமை கொண்டது. மணிக்கு 250 கிமீ வேகத்தை டாப் ஸ்பீடாக கொண்டது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டதுடன், கியரை எளிதாகவும், விரைவாகவும் மாற்றுவதற்கு ஸ்டீயரிங் வீலில் பேடில் ஷிப்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

எஞ்சின்

ஏரியல் ஆட்டம் 3.5ஆர் காரில் ஹோண்டாவிடமிருந்து சப்ளை பெறப்படும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 350 எச்பி பவரை அதிகபட்சமாக வழங்கும். காக்பிட்டின் இருபுறத்திலும் எஞ்சின் சூட்டை தணிக்கும் விதத்தில் கூலர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

டிசைன்


ஏரியல் ஆட்டம் 3.5ஆர் கார் சாலையில் ஓட்டத்தக்க ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக வலம் வருகிறது. பிற கார்களை போன்று மெட்டல் சட்டைகளை உடுத்திக் கொள்ளாமல், உடம்பில் இருக்கும் பாகங்கள் வெளியில் தெரியும் வகையில் மிக வித்தியாசமான டிசைனை கொண்டது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் இதன் அசர வைக்கும் எஞ்சின் பவர் உள்ளிட்ட கூடுதல் விஷயங்களையும் காணலாம்.
Unknown Web Developer

No comments:

Post a Comment

see this