ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் ஆக்ஷன்
திரைப்படத்தின் 6ம் பாகத்தின் டிரெய்லர் விரைவில் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில்,
திரைப்படத்தில் ரசிகர்களை மயிர்கூச்செரிய செய்யும் வகையிலான கார்
சேஸிங் சாகசங்களுக்காக நிசான் ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் கார் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நிசான் விற்பனை செய்யும் ஜிடிஆர் கார் 542 பிஎச்பி ஆற்றலை
வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஆனால், இந்த சேஸிங்களுக்காக
நிசான் ஜிடிஆர் காரை 700 பிஎச்பி ஆற்றல் கொண்டதாக டியூனிங்
செய்யப்பட்டுள்ளது.
ஆர் டியூனிங் குழு இந்த டியூனிங் பணிகளை
செய்து ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 6ம் பாகத்தில் புயல் வேகத்தில் சீறிப்
பாயவிட்டுள்ளனர். மேலும், எஞ்சின் கூலிங் சிஸ்டத்திலும் பல
மாறுதல்களை செய்துள்ளனர். நிசான் ஜிடிஆர் காரின் சேஸிங் காட்சிகள் ரசிகர்களை
பெரிதும் கவரும் என ஆர் டியூனிங் குழு தெரிவித்துள்ளது. மேலும், ஏரோடைனமிக்கை அதிகரிக்கும் வகையில் வடிவமைப்பில் மாறுதல்களும்
செய்யப்பட்டுள்ளன. ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 6ம்
பாகத்துக்காக மாற்றங்கள் செய்யப்பட்ட நிசான் ஜிடிஆர் காரின் புகைப்படங்களை
ஸ்லைடரில் காணுங்கள்.
No comments:
Post a Comment