1904ம் ஆண்டு சார்லஸ் ரோல்ஸ் மற்றும் ஹென்றி ராய்ஸ் ஆகியோரால் துவங்கப்பட்ட உலகின் சிறந்த ஆடம்பர கார் நிறுவனமான ரோல்ஸ்ராய்ஸ் தனது 110வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறது.
இதற்காக, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. குட்வுட் மோட்டார் சர்க்யூட் மற்றும் மான்செஸ்டரில் உள்ள மிட்லேண்ட் ஓட்டலில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.
ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் 110வது ஆண்டு பிறந்த தின கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள அதே மிட்லேண்ட் ஓட்டலில்தான் சார்லஸ் ரோல்ஸ் மற்றும் ஹென்றி ராய்ஸ் சந்தித்து பேசிதான் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தை உருவாக்கினர்.
110 ஆண்டுகளை தொட்டுவிட்டாலும் இன்றளவும் தன்னிகரற்ற ஆடம்பர கார் நிறுவனமாக ரோல்ஸ்ராய்ஸ் திகழ்கிறது. கோடீஸ்வரர்களின் கனவு பிராண்டாக திகழும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் மேலும் பல புதிய மைல்கற்களை எட்டுவதற்கு நாமும் வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment