கடந்த ஆண்டு தனது
பொன்விழாவை கொண்டாடும்
விதத்தில் ஈகோயிஸ்டா என்ற புதிய சூப்பர் கார் மாடலை லம்போர்கினி நிறுவனம் அறிமுகம் செய்தது.
லிமிடேட் எடிசன் மாடலாக ஒரே ஒரு கார் மட்டுமே தயாரிக்கப்படும் என்றும்
தெரிவித்தது.
இந்த நிலையில், அந்த ஒரே ஒரு காரையும் தனது மியூசியத்தில் வைத்து அழகு பார்க்க லம்போர்கினி முடிவு செய்துள்ளது. விரைவில் இந்த காரை லம்போர்கினி மியூசியத்தில் இடம்பெற உள்ளது. இதனால், இந்த காரை லம்போர்கினி மியூசியத்துக்கு வரும் பார்வையாளர்கள் கண்டு ரசிக்க முடியும்.
அப்படி என்ன இந்த காரில் ஸ்பெஷல் என்ற கேள்வி எழுகிறதா? அப்படியெனில் ஸ்லைடருக்கு வந்துவிடுங்கள். படங்களுடன் தகவல்களையும் காணலாம்.
டிசைனர்
ஃபோக்ஸ்வேகன் கார்
குழுமத்தின் தலைமை டிசைனர் வால்டர் டி சில்வாதான் இந்த காரை வடிவமைத்தவர். போர் விமானத்தின்
டிசைனையும், அம்சங்களையும்
மனதில் கொண்டு இந்த சூப்பர் காரை அவர் வடிவமைத்துள்ளார்.
சுயநலவாதி
ஸ்பானிய மொழியில்
ஈகோயிஸ்டா என்பதற்கு சுயநலம் என்று பொருளாக குறிப்பிடுகின்றனர். அதாவது, ஒரே ஒரு இருக்கை கொண்டிருப்பதால்
அவ்வாறு பெயரிட்டுள்ளனராம்.
பாடி
கார்பன் ஃபைபர்
மற்றும் அலுமினியம் பாகங்களால் இதன் பாடி கட்டமைக்கப்பட்டுள்ளது.
விசேஷ பெயிண்ட்
ரேடார் கண்ணில்
மண்ணைத் தூவி மறைவதற்காக ராணுவ வாகனங்களில் பயன்படுத்தப்படும் விசேஷ வர்ணம்
பூசப்பட்டுள்ளது.
காக்பிட்
போர் விமானங்களை
போன்றே இதன் காக்பிட்டிற்குள் காருக்கு மேலாக ஏறி உள்ளே செல்ல வேண்டும்.
இதற்காக, போர்
விமானங்களில் உள்ளதுபோன்றே திறந்து மூடும் வசதி கொண்ட கெனாப்பி கூரை
கொடுக்கப்ப்டடுள்ளது.
இது வேறயா?
இந்த காரின்
காக்பிட்டிற்குள் செல்வதற்கும், வெளியேறுவதற்கும் ஸ்டீயரிங் வீலை கழற்ற வேண்டும்.
எஞ்சின்
லம்போ கல்லார்டோ
எம்கே1 காரின்
5.2 லிட்டர்
வி10 எஞ்சினை
அதிகபட்சமாக 600 எச்பி பவரை
அளிக்கும் விதத்தில் ட்யூனிங் செய்து பொருத்தியுள்ளனர்.
மியூசியம்
இத்தாலியிலுள்ள லம்போர்கினி மியூசியத்தில் இந்த கார் விரைவில் காட்சி பொருளாக நிறுத்தப்பட உள்ளது. எனவே, அங்கு வரும் பார்வையாளர்கள் இந்த காரை இனி கண்டு ரசிக்க முடியும்.

No comments:
Post a Comment