உலக அளவில்
தொழில்நுட்ப வசதிகளில் சிறந்த எஸ்யூவி என்ற விருதை லேண்ட்ரோவர் எவோக் பெற்றுள்ளது. இந்த எஸ்யூவியில் இருக்கும்
ஆடியோ சிஸ்டம், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இதர தகவல்களை
அளிக்கும் சாதனங்கள் பற்றி
ஆட்டோமொபைல் பத்திரிக்கைகளின் வாசகர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
ஆஃப்ரோடு ஜாம்பவான்
லேண்ட்ரோவர் எவோக்
நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சொகுசு ஆஃப்ரோடு எஸ்யூவி ரகத்தில் இருக்கும்
பிற மாடல்களைவிட பல புதிய வசதிகளை இந்த எஸ்யூவி கொண்டுள்ளது. இவை
ஆஃப்ரோடு பயணங்களின்போது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். அதில், சில முக்கிய வசதிகளை அதனை அடுத்தடுத்த
ஸ்லைடுகளில் காணலாம்.
இதில், 94 சதவீதம் பேர் லேண்ட்ரோவர் எவோக் எஸ்யூவி
மிகச்சிறந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்காக, தற்போது புதிய விருதுகளை எவோக் பெற்றுள்ளது. உலகின் சிறந்த தொழில்நுட்ப
வசதிகளை அளிக்கும் கார்களில் ஒன்றாக ரேஞ்ச்ரோவர்
எவோக் எஸ்யூவிக்கு பெருமை கிடைக்க காரணமான தொழில்நுட்ப வசதிகளை ஸ்லைடரில் காணலாம்
இயங்கு நிலை தகவல்கள்
இந்த காரில்
இருக்கும் 4 வீல்
டிரைவ் சிஸ்டம் காரின் இயங்குநிலையை தொடர்ந்து கண்காணித்து சென்ட்ரல் கன்சோலில்
பொருத்தப்பட்டிருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் திரை வழியாக
டிரைவருக்கு தகவல்களை தொடர்ந்து வழங்கும். இதுதவிர, லேண்ட்ரோவர் நிறுவனத்தின் பிரத்யேக
ஆஃப்ரோடு நேவிகேஷன் சிஸ்டமும், திக்குதெரியாத இடங்களை பற்றி
டிரைவருக்கு துல்லியமான தகவல்களை தந்து கொண்டிருக்கும்
தண்ணீர் மட்ட அளவு
லேண்ட்ரோவர் வாடு
சென்சிங் சிஸ்டமும் ஆஃப்ரோடு பயணங்களுக்கு மிக முக்கியமானதாக
இருக்கும். சில சமயம்
தண்ணீர் அல்லது ஆறுகளை கடக்கும்போது எவோக் காரின் ரியர் வியூ கண்ணாடிகளில்
பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் தண்ணீரின் அளவு அபாயகரமாக உள்ளதா என்பதை
டிரைவருக்கு தெரிவிக்கும். எவோக் கார் 500 மிமீ வரை தண்ணீருக்குள் செல்லும்.
அதற்கு மேல் சென்றால் இந்த கருவி எச்சரிக்கும்
கண்காணிப்பு கேமரா
காரை சுற்றிலும்
பொருத்தப்பட்டிருக்கும் 5 டிஜிட்டல்
கேமராக்கள் மூலம் 360 டிகிரி
கோணத்தில் காரை சுற்றிலும் இருக்கும் பொருட்களை கண்காணித்து ஓட்ட முடியும்.
இது போதுமான வெளிச்சம் இல்லாத நேரத்திலும், இரவு பயணங்களிலும்
மிகச்சிறப்பான பயன்
தரும்.
பிளைன்ட் ஸ்பாட்
டிடெக்ஷன் சிஸ்டம்
நம் கவனத்துக்கும்,
கண்களுக்கும் தெரியாத
பகுதிகளை காரின் பக்கவாட்டில் இருக்கும் ரேடார் சென்சார்கள்
கண்காணித்து ரியர் வியூ கண்ணாடியில் இருக்கும் ஃப்ளாஷ் விளக்கு மூலம்
எச்சரிக்கை செய்யும். காரின் பின்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகள் குறித்த
எச்சரிக்கையை பெறலாம்.
ரிவர்ஸ் டிராஃபிக்
டிடெக்ஷன்
பார்க்கிங் அல்லாத
பகுதிகளிலும், சாலைகளிலும்
காரை பின்புறம் நகர்த்தும்போது பின்னால் வரும் வாகனங்கள் மற்றும் பொருட்கள்
குறித்து வாய்மொழியாகவும், திரை வழியாகவும்
எச்சரிக்கை தகவல்களை கொடுக்கும் வசதி இருக்கிறது.
ஈக்கோ- டிரைவ்
காரில் இருக்கும்
8 இஞ்ச்
டச்ஸ்கிரீன் மூலம் காரின் தற்போதைய எரிபொருள் சிக்கனம், எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கான
தகவல்கள் போன்றவற்றை வழங்கும். அதற்கான வழிகாட்டு
முறைகளையும் டிரைவருக்கு தெரிவிக்கும். இதன்மூலம், ஓட்டுனரின் ஓட்டுதல் திறன் மேம்படும்.
விருதுகள்
கடந்த 2011ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு
வரப்பட்டது முதல் சர்வதேச அளவில் இதுவரை 161 விருதுகளை எவோக் பெற்றுள்ளது. சிறப்பான
தோற்றம், மதி
மயங்க செய்யும் இன்டிரியர், சிறந்த ஆஃப்ரோடு கட்டமைப்பு, சவாலான விலை போன்றவை எவோக் காரின் விற்பனையில்
பிரதிபலித்து வருகின்றன. சக்தி வாய்ந்த பெட்ரோல், டீசல் எஞ்சின் மற்றும் 9 ஸ்பீடு இசட்எஃப் ஆட்டோமேட்டிக்
டிரான்ஸ்மிஷன் போன்றவையும் அதிகம் விற்பனையாகும்
லேண்ட்ரோவர் கார் என்ற பெருமையை எவோக் காருக்கு பெற்றுத் தந்துள்ளன.
எவோக்கின் வல்லமை
ரேஞ்ச்ரோவர் எவோக்
காரின் வல்லமையை எடுத்துக் காட்டும் வீடியோ!
No comments:
Post a Comment