சூப்பர் கார்
தயாரிப்பில் புகழ்பெற்ற இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி கார் நிறுவனம் அடுத்த ஆண்டு தனது பொன்விழாவை கொண்டாட
இருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில், ஸ்பெஷல் எடிசன் கார் மாடலை லம்போர்கினி அறிமுகப்படுத்துமா என ஆட்டோமொபைல் துறை
வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், இது குறித்து லம்போர்கினி தகவல் எதையும்
வெளியிடவில்லை.
இந்த நிலையில், லம்போர்கினி கார் ரசிகரான மார்க் ஹோஸ்லர் என்பவர் லம்போர்கினியின் பொன்விழாவுக்கு சிறப்பு
சேர்க்கும் விதத்தில் கான்செப்ட் லம்போர்கினி சூப்பர் கார் ஒன்றை வடிவமைத்துள்ளார். அவேன்டேடார் சூப்பர் காரின் வடிவமைப்பை மனதில் கொண்டு தனது
சொந்த கற்பனையில் இவர் உருவாக்கியுள்ள
லம்போர்கினி கார் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இருக்கிறது.
லம்போர்கினி
பெருஷிகோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த காரி்ல வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருப்பதாக
அவர் தெரிவித்துள்ளார். ஜெட் விமானத்தை
நினைவுப்படுத்தும் வகையில் முன்பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய சூப்பர் கார் மாடல் நிச்சயம் அனைவரையும் கவரும்.
பெருஷியோ என்பது லம்போர்கினி நிறுவனர் பெயர்
என்பது குறி்ப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment