சைக்கிள் ஓட்டப் போட்டிக்காக வடிவமைத்து கொடுத்த ஜாகுவார்


2014ம் ஆண்டின் டூர் டி பிரான்ஸ் சைக்கிள் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் ஸ்கை ரைடர்ஸ் அணிக்கு ரொம்ப ஸ்பெஷலான சப்போர்ட் காரை ஜாகுவார் உருவாக்கியுள்ளது. ஜாகுவார் நிறுவனத்தின் கஸ்டமைஸ் பிரிவு இந்த காரை மிக அசத்தலாக வடிவமைத்துள்ளது.
ஜாகுவார் எஃப் டைப் ஆர் கூபே காரை இவ்வாறு கஸ்டமைஸ் செய்துள்ளனர். இந்த காரில் இரண்டு பந்தய சைக்கிள்களை கொண்டு செல்வதற்கான வசதி உள்ளது. மேலும், ஒரே ஒரு கார் மட்டுமே வடிவமைத்து கொடுத்துள்ளனர்.


கூடுதல் விபரம்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் தகவல்களை காணலாம்.

எஞ்சின்

இந்த ஸ்பெஷலான மாடலில் சாதாரண எஃப் டைப் கூபே மாடலில் இருக்கும் அதே 5.0 லிட்டர் வி8 எஞ்சினை பொருத்தியுள்ளனர். இந்த எஞ்சின் 550 பிஎஸ் பவரை அளிக்கும்.

சைக்கிள் கேரியர்

இரண்டு சைக்கிள்களை எடுத்துச் செல்லும் வகையில் கூரையில் கார்பன் ஃபைபர் கேரியர் கொடுத்துள்ளனர்.

இன்டிரியர்


இன்டிரியரும் டீம் ஸ்கை ரைடர்ஸ் அணியின் பிரத்யேக வண்ணத்தை குறிக்கும் வகையில் ஃபினிஷிங் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஸ்கை ரைடர்ஸ் அணியின் இயக்குனரும், வீரரும் பேசிக் கொள்வதற்கான தொடர்பு வசதிகள் இந்த காரில்

சப்போர்ட் கார்


கடந்த 2010ம் ஆண்டு முதல் டீம் ஸ்கை ரைடர்ஸ் அணிக்கு ஜாகுவார் நிறுவனம்தான் சப்போர்ட் கார்களை வடிவமைத்து கொடுத்து வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக ஜாகுவார் எக்ஸ்எஃப் காரின் அடிப்படையிலான மாடல்கள் கொடுக்கப்பட்டது
Unknown Web Developer

No comments:

Post a Comment

see this