டுகாட்டி சூப்பர்லெகெரா 1199











டுகாட்டி 1199 சூப்பர்லெகெரா சூப்பர் பைக் முறைப்படி அறிமுகம் செய்யப்பட்டது. "இலகு எடை" என்று பொருள்படும் பெயருடன் வந்திருக்கும் இந்த புதிய சூப்பர் பைக் டுகாட்டியின் 1199 பனிகேல் ஆர் பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.
மேலும், பனிகேல் 1199 பைக்கைவிட எடை குறைந்திருப்பதுடன் கூடுதல் பவர் கொண்டது. இதற்காக, அதிகபட்ச உறுதித்தன்மை கொண்ட இலகு எடை பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன

விலை

இந்த புதிய சூப்பர் பைக் 65,000 டாலர் விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ஆக்சஸெரீஸ் பேக்

டுகாட்டி சூப்பர்லெகெராவுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆக்சஸெரீஸ்கள் போதவில்லை என்று நினைப்பவர்களுக்கு ரேஸிங் வைன்ட் ஸ்கிரீன், அக்ராபோவிக் ரேஸிங் எக்சாஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் ஆக்சஸெரீஸ்களை டுகாட்டி வழங்குகிறது. இந்த கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் மூலம் எடையை 2.5 கிலோ வரை குறைக்க முடியும் என்பதோடு, ஆற்றலையும் 5 எச்பி அதிகரித்துக் கொள்ள முடியும்.

பாதுகாப்பு வசதிகள்

டுகாட்டியின் வீலி கன்ட்ரோல், எஞ்சின் பிரேக் கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இதில் உள்ளன.

டாப் ஸ்பீடு

புதிய டுகாட்டி சூப்பர்லெகெரா 1199 சூப்பர் பைக் மணிக்கு அதிகபட்சமாக 300 கிமீ வேகத்தில் செல்லும் கட்டமைப்பை பெற்றது.

பிரேக் மாஸ்டர் சிலிண்டர்

ஹேண்டில்பாரில் ரேஸ் பைக்குள் போன்று பிரேக் மாஸ்டர் சிலிண்டர்கள் மற்றும் ரிமோட் அட்ஜெஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளன.

சக்கரங்கள்

மக்னீஷியத்திலான சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில், பிரெம்போ எம்50 மோனோபிளாக் காலிபர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பின்புற சஸ்பென்ஷன்

பின்புற மோனோஷாக் சஸ்பென்ஷனில் டைட்டானியம் ஸ்பிரிங்குடன் கூடிய ஓலின்ஸ் டிடிஎக்ஸ்- 36 சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் இலகு எடை கொண்ட ஓலின்ஸ் எஃப்எல்- 916 போர்க்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

டைட்டானிய பாகங்கள்

புகைப்போக்கியின் முழு அமைப்பும், பயன்படுத்தப்பட்டிருக்கும் இணைப்பு போல்ட்டுகள் உள்ளிட்ட பல பாகங்கள் டைட்டானியத்தில் ஆனது.

மோனோகாக் பிரேம்

இந்த பைக்கில் மக்னீஷியத்திலான மோனோகாக் மற்றும் துணை ஃப்ரேம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கார்பன் ஃபைபர் பாகங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், பனிகேல் ஆர் பைக்கைவிட எடை மிகவும் குறைந்துள்ளது.

எஞ்சின் பாகங்கள்

டைட்டானியம் உள்ளிட்ட உறுதிமிக்க அதேவேளை இலகு எடை கொண்ட பாகங்கள்தான் எஞ்சினிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எஞ்சின்

இந்த பைக்கில் 1198சிசி திறன் கொண்ட சூப்பர் குவாட்ரோ வி- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 200 எச்பி ஆற்றலை அளிக்கும். பனிகேல் ஆர் பைக் 190 எச்பி ஆற்றலை அதிகபட்சமாக வெளிப்படுத்தும்.

எடை

பனிகேல் ஆர் பைக் 189 கிலோ எடை கொண்டதாக இருக்கும் நிலையில், இந்த புதிய பைக் 155 கிலோ மட்டுமே எடை கொண்டதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆனால், முழுவதுமாக பெட்ரோல் நிரப்பும்போது எடை 177 கிலோவாக எகிறும்.

எடை

பனிகேல் ஆர் பைக் 189 கிலோ எடை கொண்டதாக இருக்கும் நிலையில், இந்த புதிய பைக் 155 கிலோ மட்டுமே எடை கொண்டதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆனால், முழுவதுமாக பெட்ரோல் நிரப்பும்போது எடை 177 கிலோவாக எகிறும்.

லிமிடேட் எடிசன்


இந்த புதிய பைக் லிமிடேட் எடிசன் மாடலாக வந்துள்ளது. மொத்தம் 500 சூப்பர்லெகெரா பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன.
Unknown Web Developer

No comments:

Post a Comment

see this