டிசைன் தாத்பரியம் பழசு என்றாலும், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பங்களும், தரும் வசதிகளும் நவீன காலக்கட்டத்துக்கு
ஏற்ப இருக்கும். பிஎம்டபிள்யூ மோட்டோராடு
டிசைன் ஸ்டூடியோவை சேர்ந்த நிபுணர்களும், பிரபல பைக் கஸ்டமைசேஷன் நிறுவனமான
ரோலன்ட் சான்ட்ஸ் டிசைன்ஸ் ஆகியவை இணைந்து இந்த பைக்கை உருவாக்கியுள்ளன.
4 வயது சிறுவனின் கனவை நிறைவேற்றும்
வகையில் 42 சக்கரங்கள் கொண்ட வித்தியாசமான காரை
டிசைன் செய்து அசத்தியிருக்கிறது பிஎம்டபிள்யூ.
இலி என்ற அந்த சிறுவன் தனது சித்தப்பாவிடம் 42 சக்கரங்கள் கொண்ட கார் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று விருப்பம்
தெரிவித்திருக்கிறார். அத்தோடு, அந்த கார் பிஎம்டபிள்யூ காராக இருக்க வேண்டும்
என்றும், அதில் 19 போர்ஷே எஞ்சின்கள் பொருத்தப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறான்.
அந்த காரின் பின்பகுதியில் நிறைய பொம்மைகளை
வைத்துக் கொள்ளும் அளவுக்கு இடவசதி வேண்டும் என்றும் தெரிவித்துள்ளான். இதனைக் கேட்ட அவனது சித்தப்பா சிறுவனின் கனவுக் கார் பற்றி பிரபல
ஆட்டோமொபைல் தளம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்த அந்த
தளத்தின் வாசகர்கள் அவரவரும் தம் தம் கற்பனை ஏற்ப கார்களை டிசைன் செய்து அந்த தளத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த செய்தி அமெரிக்க
பிரிவு பிஎம்டபிள்யூவின் காதுகளுக்கும் எட்டியது.
இதையடுத்து, சிறுவனின் கனவை நனவாக்கும் வகையில் காரை உருவாக்கித் தருமாறு தனது டிசைன் டீமிடம்
கூறியிருக்கிறது. அவர்கள் கம்ப்யூட்டரில் டிசைன் செய்தி கார் மாதிரியைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். மேலும், அந்த காருக்கு 4219இலி என்று பெயரிட்டுள்ளது பிஎம்டபிள்யூ.
சிறுவனின் ஆசைக்கு
முக்கியத்துவம் கொடுத்து பிஎம்டபிள்யூ டிசைன் செய்து அசத்தியிருப்பதை வாசகர்களும், வாடிக்கையாளர்களும் மனமுவந்து
பாராட்டியிருக்கின்றனர். இது கம்ப்யூட்டரில் வடிவமைக்கப்பட்ட மாதிரி கார் என்பதால் போர்ஷே எஞ்சின்கள்
மிஸ்ஸிங். ஆனால், இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment