உலகின் அதிக விலை கொண்ட லம்போர்கினி கார்


ஆண்டுக்கு ஆண்டு கார்களின் விலை குறையும். ஆனால், ஃபெராரி, லம்போர்கினி உள்ளிட்ட பிராண்டுகளின் சில பழைய கார் மாடல்களுக்கு, அதன் வயது ஏற, ஏற மதிப்புக்கூடிக் கொண்ட வரும்.
அதுபோன்று, வயதான ஒரு லம்போர்கினி கார் சமீபத்தில் நடந்த ஏலத்தில் ரூ.7 கோடிக்கு மேல்விற்பனையாகி வியக்க வைத்துள்ளது. இந்த கிளாசிக் லம்போர்கினி கூன்டாச் மாடல் காரை கார் சேகரிப்பாளர் ஒருவர் வாங்கியுள்ளார்.
செய்தியின் தொடர்ச்சியை ஸ்லைடரில் காணலாம்.



காஸ்ட்லி லம்போ கார்
தற்போதைக்கு உலகின் அதிக விலை கொண்ட லம்போர்கினி காராக அறியப்படும் இந்த காரைப் பற்றிய கூடுதல் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்

ஏல நிறுவனம்

2014 க்ரீன்விச் கான்கர்ஸ் டி எலிகன்ஸ் என்ற ஏல விழாவில் போன்ஹாம்ஸ் நிறுவனத்தால் இந்த கார் ஏலம் விடப்பட்டது.

மாடல்

1975ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட லம்போர்கினி கூன்டாச் எல்பி400 பெரிஸ்கோபியா என்ற மாடல்தான் ஏலத்தில் விடப்பட்டது.

லிமிடேட் எடிசன்

1974 முதல் 1977 ஆண்டு வரை லம்போர்கினி கூன்டாச் காரின் பெரிஸ்கோபியா என்ற பெயரில் லிமிடேட் எடிசன் மாடல் தயாரிக்கப்பட்டன. மொத்தம் 150 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. அதில் ஒரு கார்தான் தற்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

இதுதான் சிறப்பு

லம்போர்கினி கூன்டாச் கார்களில் பொருத்தப்பட்டிருந்த ரியர் வியூ கண்ணாடி போதிய பார்வையை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குறையை நிவர்த்தி செய்யும் விதத்தில் பெரிஸ்கோபியா ரியர் வியூ கண்ணாடிகளுடன் இந்த லிமிடேட் எடிசன் லம்போர்கினி கூன்டாச் கார்கள் வந்தன.

ஓடோமீட்டர்


ஏலத்தில் விடப்பட்ட லம்போ கூன்டாச் பெரிஸ்கோபியா கார் மொத்தமே 16,500 கிமீ தூரம் மட்டுமே ஓடியுள்ளதாக ஓடோமீட்டரில் காண்பிக்கிறது.

வண்ணம்

லெதர் இன்டிரியருடன், வெளிப்புறத்தில் நீல வண்ணம் கொண்ட இந்த கார் சிறப்பான பராமரிப்பில் இருந்து வந்துள்ளது. இதுவே இந்த காருக்கு அதிக தொகையை பெற்றுத் தருவதற்கு காரணம்.

ஒரே கையில் ஓடிய கார்

சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரைச் சேர்ந்த வாடிக்கையாளருக்கு இந்த கார் முதலில் விற்பனை செய்யப்பட்டது. அவரிடமே இதுநாள் வரை இருந்து வந்த இந்த கார் தற்போது இரண்டாவது வாடிக்கையாளரிடம் கைமாறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எகிறும் மதிப்பு

கடந்த 2010ம் ஆண்டில் ஒரு லம்போ கூன்டாச் கார் 3.36 லட்சம் டாலருக்கு ஏலம் போனது. கடந்த ஆண்டு ஒரு கூன்டாச் கார் 8.36 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த நிலையில், தற்போது ஒரு மில்லியன் டாலரைத் தாண்டி லம்போ கூன்டாச் ஏலம் போய் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆண்டுக்கு லம்போ கூன்டாச் காரின் மதிப்பு கூடிவருவதையே இது காட்டுவதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது

எஞ்சின்


ஏலத்தில் விற்கப்பட்ட லம்போர்கினி கூன்டாச் எல்400 பெரிஸ்கோபியா காரில் 375 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.0 லிட்டர் வி10 எஞ்சின் கொண்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டது. அனைத்து வீல்களிலும் இன்டிபென்டென்ட் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.



Unknown Web Developer

No comments:

Post a Comment

see this