உலகின் அதிவேக கார் என்ற பெருமையை
அமெரிக்காவின் ஹென்னிஸி வெனோம் ஜிடி பெற்றுள்ளது. கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட இந்த
சாதனை குறித்த வீடியோவை ஹென்னிஸி வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளி மையத்தின்
கென்னடி விண்கல ஓடுதளத்தில் இந்த சாதனையை ஹென்னிஸி வெனோம் ஜிடி கார் நிகழ்த்தியுள்ளது.
5.14 கிமீ
நீளமுள்ள அந்த ஓடுதளத்தில் அதிகபட்சமாக மணிக்கு 435.31
கிமீ
வேகத்தை ஹென்னிஸி வெனோம் ஜிடி கார் பதிவு செய்தது.
கடந்த 2010ம் ஆண்டு புகாட்டி வேரோன் கார் மணிக்கு 434.30
கிமீ வேகத்தை தொட்டு படைத்த உலக சாதனையை தற்போது ஹென்னிஸி வெனோம்
ஜிடி கார் முறியடித்துள்ளது.
உலகின் அதிவேக கார் என்ற சாதனையை ஹென்னிஸி
வெனோம் ஜிடி கார் பதிவு செய்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹென்னிஸி வெனோம் ஜிடி காரில் 1244 பிஎச்பி
ஆற்றலை வழங்கும் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மொத்தமாக 29 கார்களே விற்பனை செய்யப்பட உள்ளன. அதில், 11 கார்கள்
ஏற்கனவே டெலிவிரி கொடுக்கப்பட்டுவிட்டன.
No comments:
Post a Comment