உலகின் அதிவேக கார் டைட்டிலுக்காக புதிய கோனிக்செக் ஹைப்பர் கார்


உலகின் அதிவேக கார்களின் வரிசையில் இடம்பெறும் தகுதிகள் கொண்ட புதிய ஹைப்பர் காரை கோனிக்செக் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த புதிய காருக்கு கோனிக்செக் ஒன்:1 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு கிலோ எடைக்கு ஒரு குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் விகிதம் கொண்ட கார் என்பதை குறிக்கும் வகையிலேயே இந்த காருக்கு ஒன்:1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

1,340 எச்பி திறன் கொண்ட இந்த புதிய ஹைப்பர் கார் புகாட்டி வேரோன் மற்றும் ஹென்னிஸி வெனோம் ஜிடி கார்களுக்கு போட்டியாக களமிறங்குகிறது.


"மெகாவாட்" கார்

புதிய ஒன்:ஹைப்பர் காரை உலகின் முதல் "மெகாவாட்" காராக கோனிக்செக் நிறுவனம் குறிப்பிடப்படுகிறது. அதாவதுஇந்த கார் 1,000 கிலோவாட் (1,340எச்பி) பவரை அளிக்கும் என்பதையே அவ்வாறு அழைப்பதாக தெரிவிக்கிறது.

எஞ்சின்

கோனிக்செக் அகரா காரில் இருக்கும் 5.0 லிட்டர் விஎஞ்சினில் மாற்றங்களை செய்து இந்த புதிய காரில் பொருத்தியிருக்கின்றனர். இந்த கார் ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

பெர்ஃபார்மென்ஸ்

1,340 கிலோ எடையும், 1,340 எச்பி ஆற்றலை அளிக்கும் எஞ்சின் கொண்ட இந்த புதிய கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 2.6 வினாடிகளில் தொட்டுவிடும். மேலும், 0 - 400 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 20 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொண்டு கடந்துவிடும்.

டாப் ஸ்பீடு

புகாட்டி வேரோன் ஜிடி கார் மணிக்கு 434.30 கிமீ வேகத்தையும்ஹென்னிஸி வெனோம் ஜிடி கார் மணிக்கு 435.31 கிமீ வேகத்தையும் தொட்டு சாதனை படைத்துள்ளன. இந்த சாதனைகளை புதிய கோனிக்செக் ஒன்:கார் முறியடிக்கும் என்று தெரிகிறது. எனவேஇந்த இரு கார்களையும் தாண்டி மணிக்கு 440 கிமீ வேகம் வரை இந்த கார் டாப் ஸ்பீடு கொண்டதாக இருக்கும்

விற்று தீர்ந்தது

மொத்தம் கோனிக்செக் ஒன்:கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளன. ஒரு காரின் விலை மில்லியன் டாலர்கள். ஆனால்இந்த கார்களுக்கும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது என்பது கொசுறுத் தகவல்!







Unknown Web Developer

No comments:

Post a Comment

see this