2017ல் எஸ்யூவி அறிமுகம்


உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் கடந்த ஆண்டு ஈர்த்த லம்போர்கினியின் உரஸ் எஸ்யூவி 2016ம் ஆண்டு இறுதியில் அறிமுகமாக உள்ளது. கடந்த ஆண்டு பீஜிங் ஆட்டோ ஷோவில் உரஸ் எஸ்யூவியின் கான்செப்ட் மாடலை லம்போர்கினி பார்வைக்கு வைத்திருந்தது. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த மாடலாக பேசப்பட்டது.
இந்தநிலையில், 2017ம் ஆண்டில் உரஸ் எஸ்யூவி அனைத்து மார்க்கெட்டுகளுக்கும் வந்துவிடும் என லம்போ தெரிவித்துள்ளது. வருடாந்திர பத்திரிக்கையாளர் மாநாட்டில் இந்த தகவலை லம்போர்கினி தாய் நிறுவனமான ஆடியின் தலைமை செயல் அதிகாரி ரூபர்ட் ஸ்டாட்லர் தெரிவித்துள்ளார்.
ஃபோக்ஸ்வேகன் டூரக், போர்ஷே கேயென் மற்றும் ஆடி க்யூ7 உள்ளிட்ட கார்கள் வடிவமைக்கப்பட இருக்கும் அடுத்த தலைமுறை எம்எல்பி பிளாட்பார்மில்தான் புதிய உரஸ் சூப்பர் எஸ்யூவி தயாரிக்கப்பட உள்ளது. இலகு எடை மற்றும் உறுதிமிக்க அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபர் பாடியால் உரஸ் வடிவமைக்கப்பட உள்ளது.
மேலும், எம்எல்பி பிளாட்பார்மில் தயாரிக்கப்பட உள்ள கார்களுக்காக புதிய கார்பன் ஃபைபர் மிக்ஸரை ஃபோக்ஸ்வேகன் கண்டுபிடித்து, அதனை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கார்பன் ஃபைபர் பாடி பேனல்கள் மற்றும் சேஸி தயாரிப்பிற்கான வார்ப்புகளில் செலுத்தும்போது ஒரு சில நிமிடங்களில் இறுகிவிடும் என்று கூறப்படுகிறது.












Unknown Web Developer

No comments:

Post a Comment

see this