லாஃபெராரி காரின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சேகரிப்பாளர்களாகவும், ஃபெராரி கார்களின் காதலராகவும் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஏனெனில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த காரை முன்பதிவு செய்தவர்களில் ஏற்கனவே ஃபெராரி கார் வைத்திருப்பவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும் என்று ஃபெராரி தெரிவித்திருந்தது.
அதன்படியே, தற்போது லாஃபெராரி காரின் பெரும்பாலான வாடிக்கையாளர்களிடம் ஏற்கனவே ஃபெராரி கார்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பாடகரும், கார் சேகரிப்பு பிரியருமான ஜேகே ஒரு பிரத்யேக வண்ணத்திலான லாஃபெராரியை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அந்த ஃபெராரி காருடன் வலம் வருவதுதான் தற்போது அவருடைய பொழுதுபோக்காக உள்ளது

பவர்ஃபுல் கார்
ஃபெராரி நிறுவனத்தின் முதல் ஹைபிரிட் மாடலாக வந்த இந்த காரில் 6.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டிருக்கிறது. இரண்டும் சேர்த்து இந்த காருக்கு அதிகபட்சமாக 963 பிஎஸ் பவரையும்,
பாடகர் ஜே கே
இங்கிலாந்தை சேர்ந்த ஜூமைர்காய் பேண்ட் இசைக்குழுவின் பாடகரான ஜேகே.,விடம் ஏராளமான கார்கள் உள்ளன. அதில், ஒரு கருப்பு நிற ஃபெராரி என்ஸோ காரும் உள்ளது.
பட்டியலில் இல்லாத கலர்
ஃபெராரி என்றாலே சிவப்பு கலர்தான் நினைவுக்கு வரும். ஆனால், ஜேகே வாங்கியிருக்கும் லாஃபெராரி வண்ணம் பிற வாடிக்கையாளர்களிடமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இந்த வண்ணம்
தரிசனம்
தனது பிரத்யேக பச்சை வண்ண லாஃபெராரியில் குட்வுட் ஆஃப் ஸ்பீடு ஆட்டோமொபைல் திருவிழாவிற்கு ஜேகே வந்தார். அப்போதுதான், அவரிடம் பச்சை வண்ண லாஃபெராரி வெளியுலகுக்கு தெரியவந்தது.
ஜேகே பெருமிதம்
இந்த வண்ணம் எல்லோருக்கும் பிடிக்கிறதா என்பது பற்றி கவலையில்லை. ஆனால், லாஃபெராரிக்கு ஒரு தனித்துவத்தை இந்த வண்ணம் வழங்குகிறது என்று பெருமிதம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment