ஃபெராரி கலிஃபோர்னியா டி


அடுத்த மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஃபெராரி கலிஃபோர்னியா காரின் படங்கள், தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
1980களில் தயாரிக்கப்பட்ட எஃப்40 காருக்கு பின்னர் டர்போசார்ஜ்டு எஞ்சினுடன் வந்திருக்கும் புதிய ஃபெராரி கார் இது. இந்த காரின் அதிகாரப்பூர்வ படங்கள் மற்றும் முக்கிய அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

மேம்படுத்தப்பட்ட மாடல்

இது புத்தம் புதிய மாடலாக இல்லாமல், கலிஃபோர்னியா காரின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்துள்ளது. 'டி' என்பது டர்போசார்ஜரை குறிக்கும் விதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

தோற்றத்தில் பொலிவு

காரின் முன்பக்கம், பின்பக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 458 இட்டாலியா மற்றும் எஃப்12 பெர்லினேட்டா கார்களின் டிசைன் தாத்பரியங்களை எடுத்து மாற்றங்களை செய்துள்ளனர்.

 இன்டிரியர்

2+2 இருக்கை அமைப்பு கொண்ட இந்த ஃபெராரி காரில் பல புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், ஒன்றாக 6.5 இஞ்ச் டச்ஸ்கிரீன் திரை கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

மஸராட்டி குவாட்ரோபோர்ட் காருக்காக தயாரிக்கப்பட்ட 3.8 லிட்டர் வி8 எஞ்சினை ட்யூன் செய்து இதில் பொருத்தியிருக்கின்றனர். இந்த எஞ்சின் 552 எச்பி பவரையும், 755 என்எம் டார்க்கையும் வழங்கும்.

எஞ்சின் சிறப்பம்சங்கள்

தற்போது விடைபெற இருக்கும் கலிஃபோர்னியா காரில் பொருத்தப்பட்டிருக்கும் 4.3 லிட்டர் வி8 எஞ்சினை விட புதிய காரில் இருக்கும் எஞ்சின் 15 சதவீதம் எரிபொருள் சிக்கனத்தையும், 49 சதவீத கூடுதல் டார்க்கையும் வழங்கும்.

Unknown Web Developer

No comments:

Post a Comment

see this