ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்









லிமிடேட் எடிசன் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் அறிமுகம்!

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் டிராப்ஹெட் கூபே மாடலின் லிமிடேட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1937ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியில் சர் மால்கன் கேம்பல் என்பவர் ரோல்ஸ்ராய்ஸ் எஞ்சின் பொருத்தப்பட்ட புளூபேர்டு கே3 படகை அதிவேகத்தில் செலுத்தி உலக சாதனை படைத்தார்.
இத்தாலியிலுள்ள மேகியோர் ஏரியில் முதல்முறையில் மணிக்கு 203 கிமீ வேகத்திலும், பின்னர் மணிக்கு 208 கிமீ வேகத்திலும் படகில் பறந்து உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை நினைவுகூறும் விதத்தில்தான் இந்த புதிய லிமிடேட் எடிசன் காரை ரோல்ஸ்ராய்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும், வாட்டர்ஸ்பீடு கலெக்ஷன் என்ற பெயரில் இந்த லிமிடேட் எடிசன் வந்துள்ளது.

 

அறிமுகம்

கடந்த 13ந் தேதி லண்டனில் படகை தயாரித்த புளூபேர்டு நிறுவனம் அமைந்திருந்த இடத்தில் நடந்த விழாவில் இந்த லிமிடேட் எடிசன் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் புளூபேர்டு ரெஸ்ட்டாரண்ட் செயல்பட்டு வருகிறது.

ஸ்பெஷல் வண்ணம்

ஃபான்டம் டிராப்ஹெட் கூபே காரின் வாட்டர்ஸ்பீடு கலெக்ஷன் மாடல் ஏரியின் நீல நிற தண்ணீரை நினைவூட்டும் வகையில், பிரத்யேகமான நீல வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புளூபேர்டு நிறுவனத்தின் பிரத்யேக வண்ணமும் கூட. காரின் பாடி மட்டுமின்றி, வீல்கள் மற்றும் எஞ்சினிலும் இதே வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அனுமதி


சாதனை நாயகன் கேம்பலின் பேரனிடம் சிறப்பு அனுமதி பெற்று மொத்தம் 35 கார்களை லிமிடேட் எடிசனாக ரோல்ஸ்ராய்ஸ் விற்பனை செய்ய உள்ளது.

இன்டிரியர்

மேகியோர் ஏரியின் தண்ணீர் நிறம் இன்டிரியரின் பல இடங்களில் பிரதிபலிக்கிறது. ஸ்டீயரிங் வீல், கப் ஹோல்டர்கள் ஆகியவற்றை பார்த்தால் தெரியும். முதன்முறையாக ஸ்டீயரிங் வீலில் இரட்டை வண்ணக்கலவை கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்


முதல்முறையாக எஞ்சினில் இரட்டை வண்ணத்தை கொடுத்து அசத்தியுள்ளது ரோல்ஸ்ராய்ஸ். இந்த காரில் 6.75 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 453 எச்பி பவரை வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது.
Unknown Web Developer

No comments:

Post a Comment

see this