அடுத்த ஆண்டு 2 புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை அறிமுகம் செய்ய டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இரண்டு பைக்குகளில் ஒன்று 300சிசி பைக்காகவும் மற்றொன்று 500சிசி பைக்காகவும் இருக்கும். இதில், 300சிசி பைக் சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 500சிசி பைக்கின் எஞ்சின் பற்றிய விபரங்கள் தெரியவில்லை.
அடுத்த ஆண்டின் இரண்டாவது பாதியில் இந்த இரு மோட்டார்சைக்கிள்களும் அறிமுகம் செய்யப்படும். முதலில் 300சிசி பைக்கும், அதைத்தொடர்ந்து 500சிசி பைக்கும் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இந்தியாவில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது டீலர்ஷிப்புகள் வழியாக இந்த புதிய பைக் மாடல்களை விற்பனை செய்யும். இதேபோன்று, ஐரோப்பிய மார்க்கெட் உள்பட வெளிநாடுகளில் பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் தனது டீலர்ஷிப்புகள் வழியாக இந்த புதிய பைக்குகளை விற்பனை செய்யும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment