4 புதிய கார் மாடல்கள்: பிஎம்டபிள்யூ


நடப்பு ஆண்டில் மேலும் 4 புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
சொகுசு கார் மார்க்கெட்டில் கோட்டை விட்ட முதலிடத்தை பிடிப்பதற்கு பிஎம்டபிள்யூ கடும் பிரத்யேனங்களை செய்து வருகிறது. மேலும், பல புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.
இந்த ஆண்டில் மேலும் 4 புதிய கார் மாடல்கள்: பிஎம்டபிள்யூ


இந்த நிலையில், இந்த ஆண்டுக்குள் மேலும் 4 புதிய மாடல்கலை களமிறக்க உள்ளதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.
எக்கானமிக் டைம்ஸ் ஆட்டோமொபைல் தளத்திற்கு பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் பிலிப் வான் சர் பேட்டியளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது," இந்த ஆண்டு இதுவரை 5 புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளோம். இதைதவிர்த்து, மேலும் 4 புதிய மாடல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
புதிய எம்3, எம்4 கூபே மற்றும் எம்5 செடான் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளோம். புதிய ஐ8 ஹைபிரிட் காரையும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறோம்.
பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார் எதிர்பார்த்த அளவு விற்பனையில் சோபிக்கவில்லை. விலையுயர்ந்த மாடல்கள் அளவிற்கு 1 சீரிஸ் காரின் விற்பனை இல்லை. இருப்பினும், என்ட்ரி லெவல் சொகுசு கார் மார்க்கெட்டிலும் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம்," என்று கூறியுள்ளார்.
Unknown Web Developer

No comments:

Post a Comment

see this