புதிய கான்செப்ட் அஸ்டன் மார்ட்டின்(Aston Martin CC100 Speedster )


தனது நூற்றாண்டு விழாவையொட்டி, புதிய கான்செப்ட் கார் ஒன்றை அஸ்டன் மார்ட்டின் வெளியிட்டு இருக்கிறது. சிசி100 ஸ்பீட்ஸ்டர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய கார் வி12 வான்டேஜ் காரை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ஆறே மாதங்களில் டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த புதிய கான்செப்ட் காரில் வி12 எஞ்சின் கொண்டதாக இருக்கும். இதுகுறித்து அஸ்டன் மார்ட்டின் சிஇஓ டாக்டர் உல்ரிச் பெஸ் கூறுகையில்,"1959 ரேஸ் கார்களை ஒத்திருப்பதால், இதற்கு நான் டிபிஆர் 100 என்று செல்லப்பெயரிட்டுள்ளேன்.
எங்களது நூற்றாண்டு விழாவையொட்டி, எங்களுக்கு நாங்களே தந்துகொள்ளும் பரிசாகவே இந்த கான்செப்ட் காரை வடிவமைத்துள்ளோம். எதிர்காலத்தில் ஸ்பீட்ஸ்டர் அடிப்படையில் வித்தியாசமாகவும், எங்களது தொழில்நுட்பத்தை பரைசாற்றும் விதத்திலும் புதிய கார்கள் வரும்," என்றார்.

புதிய கான்செப்ட் கார் 4 வினாடிகளில் 96 கிமீ., வேகத்தை எட்டும். மணிக்கு 290 கிமீ., வேகம் வரை செல்லும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். வெறும் 6 மாதங்களில் வடிவமைக்கப்பட்ட அஸ்டன் மார்ட்டினின் புதிய கான்செப்ட் கார் எப்படியிருக்கும்













Unknown Web Developer

No comments:

Post a Comment

see this