லோட்டஸ் ஹைப்பர் பைக்கின்


உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய லோட்டஸ் ஹைப்பர் பைக்கின் அதிகாரப்பூர்வ படங்கள் மற்றும் விபரங்கள் வெளியிடப்பபட்டுள்ளன. லோட்டஸ் பிராண்டில் வெளியிடப்பட்டிருந்தாலும், லோட்டஸ் சி-01 பைக்கின் பொறியியல் நுட்பம் மற்றும் தயாரிப்பில் ஜெர்மனியை சேர்ந்த கொடேவா எஞ்சினியரிங் நிறுவனம்தான் முழு பொறுப்பையும் ஏற்று செயல்படுத்தியது.
மேலும், ட்ரோன் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் விசித்திரமான வாகனங்களை டிசைன் செய்து பிரபலமடைந்த டுகாட்டி டிசைன் பிரிவின் முன்னாள் தலைவர் டேனியல் சைமனும் இந்த புதிய பைக் டிசைனில் முக்கிய பங்காற்றியுள்ளார். லோட்டஸ் சி-01 ஹைப்பர் பைக்கின் அதிகாரப்பூர்வ படங்கள்

விற்பனை உரிமை

லோட்டஸ் பிராண்டில் இந்த பைக்கை விற்பனை செய்வதற்கு ஜெர்மனியின் கொடேவா நிறுவனத்துக்கு உரிமத்தை பிரிட்டனை சேர்ந்த லோட்டஸ் நிறுவனம் தர இருக்கிறது.

கார்பன் ஃபைபர் ஃப்ரேம்

இந்த பைக் கார்பன் ஃபைபர், டைட்டானியம் மற்றும் விமானங்களுக்கான உயர் தர உலோகம் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மோனோகாக் சேஸீ கொண்டது.

எஞ்சின்

ஆஸ்திரியாவின் கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி8 பைக்கின் 1195சிசி வி ட்வின் எஞ்சினை ட்யூன் செய்து இந்த புதிய ஹைப்பர் பைக்கில் பொருத்தியிருக்கின்றனர். இது 200 பிஎச்பி ஆற்றலை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடை

இந்த ஹைப்பர் பைக் வெறும் 180 கிலோ எடை கொண்டதாக இருக்கும் என்று கொடேவா தெரிவித்துள்ளது.

பிரேக்

முன்புறத்தில் 4 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட இரண்டு 320 மிமீ டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பின்புறத்தில் 2 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட 220மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

லிமிடேட் எடிசன்


மொத்தமாக 100 லோட்டஸ் சி-01 பைக்குகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த பைக்குகள் விதவிதமான வண்ணங்களிலும், அதில் சில வண்ணங்களிலான லோட்டஸ் சி-01 பைக்குகள் லோட்டஸ் நிறுவனத்தின் கார் பந்தய துறையின் பங்களிப்பை கவுரவப்படுத்தும் விதத்தில் வெளியிடப்பட உள்ளன.









Unknown Web Developer

No comments:

Post a Comment

see this