கடும் போட்டிக்கு
மத்தியில் டுகாட்டி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை ஆடி கார் நிறுவனம் வாங்குகிறது.
இத்தாலியை சேர்ந்த சூப்பர் பைக் தயாரிப்பாளரான
டுகாட்டி உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனம். மோ்ட்டார்சைக்கிள் பந்தயங்களிலும் டுகாட்டி மோட்டார்சைக்கிள்கள் வெற்றிகொடி நாட்டி வருகின்றன.
இந்த நிலையில், எதிர்கால வர்த்தக வளர்ச்சிக்கு ஏற்ப நிதி ஆதாரம் திரட்டும் வகையில், பெரும்பான்மையான பங்குகளை விற்பனை செய்வதாக டுகாட்டி அறிவித்தது.
ADVERTISEMENT
இதனால், டுகாட்டியை வாங்குவதற்கு உலக அளவில்
ஏராளமான நிறுவனங்கள் களத்தில் குதித்தன. இந்தியாவின் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் கூட டுகாட்டியை வாங்க இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஜெர்மனியை சேர்ந்த ஆடி சொகுசு
கார் தயாரிப்பு நிறுவனம் டுகாட்டியை வாங்க இருப்பதாக
அறிவித்துள்ளது.
மேலும், ரூ.5500 கோடி மதிப்பில் டுகாட்டியை கையகப்படுத்த இருப்பதாக ஆடி
நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் இதற்கான
அறிவிப்புகள் முறைப்படி வெளியிடப்படும் என்று ஆடி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment