/top-10 cars/அதிக Pickup கொண்ட டாப்- 10 கார்கள்!


Pickup என்பதற்கு துவக்கு விசை என்று பொருள்.
0 நிலையிலிருந்து 100 கிமீ வேகத்தை எத்தனை மணித்துளிகளில் எட்டுகிறது என்பதை வைத்து டாப்- 10 கார் மாடல்களை காணலாம்.
0- 100 கிமீ வேகத்தை எட்டுவதில் இந்த கார்கள் வியக்க வைக்கின்றன. அதாவது ஒரு சில சொடக்கு போடுவதற்குள் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டவையாக இந்த கார்கள் இருக்கின்றன. அப்படியெனில் இவற்றின் வல்லமையையும், பொறியியல் திறனையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

 1/Aril Atom v8/ ஏரியல் ஆட்டம் வி8




Q      உலகின் மிகச்சிறந்த pickup கொண்ட மாடல்களின் பட்டியலில் ஏரியல் ஆட்டம் வி8 கார்தான் நம்பர்-1 ஆக குறிப்பிடப்படுகிறது. வெறும் 2.3 வினாடிகளில் 0 -100 கிமீ வேகத்தை எட்டிவிடும் வல்லமை கொண்டது.
Q      பிற கார்களை போன்று முழுவதுமான மூடி மறைக்கப்பட்ட பாடி போன்றவை இல்லாமல் frame வலிபடியாக கொண்டுள்ளது. இந்த கார் செல்லும் வேகம் அதிவேக கார் பிரியர்களை பரவசமடைய செய்யும்.
Q      இந்த காரில் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது இது 500 எச்பி சக்தியை அளிக்கிறது.

2/Porsche 918 spider/ போர்ஷே 918 ஸ்பைடர்



Q      ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் போர்ஷே நிறுவனத்தின் மாடலான போர்ஷே 918 ஸ்பைடர் கார் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
Q      இந்த கார்  0- 100 கிமீ வேகத்தை 2.3 வினாடிகளில் எட்டிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.
Q      இந்த காரில் 4.6 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 608 எச்பி பவரை வாரி இறைக்கும் வல்லமை கொண்டது.
Q      அதிகபட்சமாக மணிக்கு 345 கிமீ வேகம் ஓடகுடியது.

3/Nissan GT-R/ நிசான் ஜிடி- ஆர் (நிஸ்மோ)




Q      நிசான் நிறுவனத்தின் புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் காரான ஜிடி- ஆர் நிஸ்மோ காரும் சிறப்பான pickup கொண்ட கார்களில் மூன்றாவது சிறந்த மாடலாக இடம்பெற்றுள்ளது.
Q      இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 2.4 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது.
Q      இந்த காரில் 3.8 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்படுள்ளது இது 595 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

4/Bugatti Veyron /புகாட்டி வேரான் சூப்பர்ஸ்போர்ட் (2010 மாடல்)



Q      உலகின் அதிவேக காராக புகழப்பெற்று வந்து டைட்டிலை இழந்த புகாட்டி வேரான் சூப்பர்ஸ்போர்ட் காரும் சிறந்த pickup கொண்ட கார் மாடல் என்பது அனைவரும் அறிந்ததே.
Q      இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 2.46 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது.
Q      இந்த காரில் 1,200 பிஎஸ் பவரை அளிக்கும் 8.0 லிட்டர் டபிள்யூ16 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
Q      0- 240 கிமீ வேகத்தை வெறும் 9.8 வினாடிகளில் கடந்துவிடும் திறன் பொருந்தியது. உலகின் வேக பிரியர்களின் நம்பர்-1 சாய்ஸாகவும் விளங்குகிறது.

5/கபாரோ டி1 (2007 மாடல்)




Q      இங்கிலாந்தை சேர்ந்த கபாரோ வாகன தொழில்நுட்ப நிறுவனத்தின் தயாரிப்புதான் இந்த ஸ்போர்ட்ஸ் கார்.

Q      மெக்லாரன் எஃப்- 1 காரை உருவாக்கிய பொறியியல் வல்லுனர் குழுவில் இடம்பெற்றிருந்த பல பொறியாளர்கள் இணைந்து உருவாக்கிய மாடல்தான் இது.

Q       இந்த கார் ஃபார்முலா- 1 கார்களின் டிசைன் அம்சங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. 2007ம் ஆண்டு உற்பத்தி துவங்கப்பட்ட இந்த காரில் 575 எச்பி பவரை அளிக்கும் 3.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் எட்டிவிடும்.

6/மெக்லாரன் பி1(2013 மாடல்)




Q      மெக்லாரன் நிறுவனத்தின் ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் இது. 2012ம் ஆண்டு பாரிஸ் மோட்டார் ஷோ மூலம் பார்வைக்கு வந்தது. கடந்த ஆண்டு உற்பத்தி துவங்கப்பட்ட இந்த கார் முதலில் இங்கிலாந்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மொத்தமாக 375 கார்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளன.
Q      இந்த காரில் 727 பிஎச்பி ஆற்றலை அளிக்கும் 3.8 லிட்டல் வி8 பெட்ரோல் எஞ்சினும், 176 பிஎச்பி ஆற்றலை வழங்கும் மின் மோட்டாரும் பொருத்தப்பட்டிருக்கிறது. இரண்டும் சேர்த்து அதிகபட்சமாக 903 பிஎச்பி ஆற்றலை இந்த காருக்கு வழங்கும்.
Q      இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 2.6 வினாடியில் எட்டும் திறன் கொண்டது. ஆனால், நிறுவனத்தின் தரப்பில் 0- 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 2.8 வினாடிகள் எடுத்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7/Porsche-911S/ போர்ஷே 911 டர்போ எஸ்



Q      போர்ஷே நைன் எலெவன் என்று அழைக்கப்படும் இந்த கார் போர்ஷே உருவாக்கிய கார்களில் சிறந்த செயல்திறன் கொண்ட மாடல்களில் ஒன்று.
Q      1963ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் இன்றளவும் மார்க்கெட்டில் பல்வேறஉ மாடல்களில் நிலைத்து நிற்கிறது.
Q      இந்த காரில் 560 எச்பி பவரை அளிக்கும் 3.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 2.6 வினாடிகளில் எட்டிவிடும். ஆனால், நிறுவனம் தரப்பில் 0-100 கிமீ வேகத்தை 2.9 வினாடிகளில் எட்டும் என தெரிவிக்கப்படுகிறது.

8/Lamborghini Aventador /லம்போர்கினி அவென்டேடார் (2012)

Q      எட்டாவது இடத்தில் லம்போர்கினி அவென்டேடார் கார் இருக்கிறது. உலக அளவில் சூப்பர் கார் பிரியர்களின் இஷ்ட தெய்வமாக வழங்கப்படுகிறது. 2011ம் ஆண்டு விற்பனைக்கு வந்த இந்த கார் மாடலும் ஒரு லிமிடேட் எடிசன் மாடல்தான். 4,000 கார்கள் தயாரித்தவுடன் உற்பத்தி நிறுத்தப்படும்.
Q      இந்த காரில் 700 பிஎஸ் பவரை அளிக்கும் 6.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 0- 100 கிமீ வேகத்தை இந்த கார் 2.7 வினாடிகளில் எட்டிவிடும்.
Q      அதேவேளை, இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 2.9 வினாடிகள் எடுத்துக் கொள்ளும் என லம்போர்கினி தெரிவிக்கிறது.

9/Lamborghini Murcielago/ லம்போர்கினி மூர்சிலாகோ




Q      டாப்- 10 பட்டியலில் கடைசி இடத்தை லம்போர்கினி மூர்சிலாகோ மாடல் இடம்பெற்றுள்ளது. 0- 100 கிமீ வேகத்தை 2.9 வினாடிகளில் எட்டிவிடும். இந்த காருக்கு மாற்றாகத்தான் லம்போர்கினி அவென்டேடார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
Q      2001ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையில் மொத்தம் 4,099 கார்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டன. இந்த காரில் 670 பிஎஸ் பவரை அளிக்கும் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது.
Q      சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மூர்சிலாகோ எல்பி670-4 சூப்பர்வெலாஸ் மாடல் 2009 முதல் 2010ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்தது.

10/எஸ்எஸ்சி அல்டிமேட் ஏரோ டிடி




Q      டாப்-10 பட்டியலில் கடைசி இடத்தில் வட அமெரிக்க தயாரிப்பான எஸ்எஸ்டி அல்டிமேட் ஏரோ டிடி கார் பெற்றுள்ளது.

Q      இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 2.9 வினாடிகளில் எட்டிவிடும். உலகின் அதிவேக கார் என்ற பெருமையை ஒரு வாரத்திற்கு வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Unknown Web Developer

No comments:

Post a Comment

see this